அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3
ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.
சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
We are waiting for appointment
ReplyDelete