தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில், 309 டெக்னிக்கல் எஸ்.ஐ.,
பணியிடங்களுக்கு இன்று (ஜூலை 11) முதல் இருபாலரும் ஆன்லைனில் (tnusrbonline.org) விண்ணப்பிக்கலாம். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆக.,10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.விண்ணப்பிப்பவர்கள் 2018 ஜூலை 1 ல் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (1990 ஜூலை 1 அல்லது அதற்கு பின் பிறந்தவர், 1998 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பிறந்தவர்). பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது உச்ச வரம்பு 30 வயது. ஆதிதிராவிடருக்கு 33 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு 45 வயது இருக்கலாம்.தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்பில் குறைந்தபட்சம் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தொழில்நுட்ப கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டம் ( பி.டெக்.,- பி.இ.,) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் 500 ரூபாய். மேலும் விபரங்களை சீருடை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...