Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அரசு தேர்வுத் துறை புகார்

சென்னை, தமிழக பிளஸ் 2 மாணவர்களின்
தகவல்கள், 'லீக்' ஆனது குறித்து, விசாரணை நடத்தும்படி, சென்னை போலீசில், அரசு தேர்வுத் துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ., மாணவர்களின், தனிப்பட்ட விபரங்கள், தனியார், 'டேட்டா பேஸ்' நிறுவனங்களின் வழியாக, லீக் ஆனதாக, இணையதளம் ஒன்றில், சில தினங்களுக்கு முன், செய்தி வெளியானது. இதற்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையில் படித்த, பிளஸ் 2 மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, மாவட்டத்துக்கு, 2,000 ரூபாய்; ஒரு மாணவர் விபரத்துக்கு, ஒரு ரூபாய் என விற்கப்படுகின்றன.இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன், செய்தி வெளியானது.எனவே, இதுபற்றி விசாரணை நடத்தும்படி, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், 'மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் முகவரியுடன், தனிப்பட்ட விபரங்களை, 'மார்கெட்டிங்' நிறுவனங்கள் விற்று வருகின்றன.'இந்த தகவல்கள், எங்கிருந்து பெறப்பட்டன; திருடப்பட்டதா அல்லது வேறு யாரிடமும், அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டதா என, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், மார்கெட்டிங் நிறுவனங்கள் விற்கும் தகவல்கள், தேர்வுத் துறையிடம் உள்ள தகவல்கள் இல்லை என, தெரிய வந்துள்ளது. ஆனால், அவை, பள்ளி மாணவர்களின் விபரங்கள் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.பல்வேறு வழிகளில், இந்த விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்பதால், எங்கிருந்து பெறப்பட்டது என, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசின் தேர்வுத் துறை நடத்தும், அனைத்து தேர்வுகளின், 'டிஜிட்டல்' விபரங்கள் மற்றும், 'ஆன்லைன்' நடவடிக்கைகள், சென்னையில் உள்ள, 'கே லேப்ஸ்' என்ற நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.தேர்வுக்கான மதிப்பெண் பதிவு விபரங்கள், தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன், அவர்களது விபரங்கள், 'நாமினல் ரோல் என்ட்ரி' என்ற வகையில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, தேர்வுத்துறை வழங்கியுள்ள, 'சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படுகின்றன.இந்த தளங்களை செயல்படுத்தும் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வுத்துறை மண்டல அலுவலகம், இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு உள்ளன.தேர்வு முடிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனம் வழியே, 'பல்க் எஸ்.எம்.எஸ்.,' என்ற, ஒட்டுமொத்த குறுஞ்செய்தியாக, தேர்வுத்துறை சார்பில், மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அந்த தனியார் நிறுவனத்துக்கு, மாணவர்களின் பெயர், பள்ளி, பதிவு எண், மொபைல் போன் விபரங்கள் வழங்கப்படும்.மேலும், அரசின் பல்வேறு துறைகளின் உதவி தொகைக்காக, மாணவர் விபரங்கள், அந்த துறைகளுக்கு, முழுமையாக வழங்கப்படுகின்றன.மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, தமிழக அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு, 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு, வங்கி கணக்கு எண்ணுடன், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.'பஸ் பாஸ்' வழங்குவதற்காக, மாணவர்களின் வீட்டு முகவரி உள்பட அனைத்து விபரங்களும், போக்குவரத்து துறைக்கு தரப்படுகின்றன.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், இலவச பயிற்சி நிகழ்ச்சி, இலவச நீட் தேர்வு பயிற்சி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பரிசு, உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.பல்வேறு கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்றவை, மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி தருவதாக கூறி, தகவல் திரட்டை பெறுகின்றனர்.பல்கலைகள், மத்திய அரசின் பல்வேறு உதவி தொகை வழங்கும் நிறுவனங்கள், மாணவர் தகவல் திரட்டை, பள்ளிக் கல்வித் துறையில் பெறுகின்றன.இவற்றிற்கு எல்லாம் மேலாக, அந்தந்த தனியார் பள்ளிகளிடம், அவரவர் மாணவர் விபரங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மாணவர் நிகழ்ச்சிகளில், மாணவர்களே தங்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவற்றை எல்லாம் நிறுத்தி, ரகசியம் காப்பாற்றினால் மட்டுமே, மாணவர் விபரங்கள் ரகசியமாக இருக்கும். தற்போதைய நிலையில், தகவல் திரட்டு என்பது, வெளிப்படையானதாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive