Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசசே விருது அறிவிப்பு.. 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் தேர்வு

இந்த வருடத்திற்கான மகசசே விருதுக்கு,
இரு இந்தியர்கள் உட்பட ஆறு பேர் தேர்வாகியுள்ளனர்.



ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படுவது ரமோன் மகசசே விருது. பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசசே நினைவாக வருடந்தோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
அரசுப்பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரமோன் மகசேசே விருதுபெற ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ்r, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதற்கு முந்தைய 2016ம் ஆண்டு, டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு விருதுகள் கிடைத்தன.
இவ்வாண்டுக்கான மகசாசே விருதிற்கு, இந்தியர்களான பரத் வத்வானி, மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தெருக்களில் அனாதையாக சுற்றித் திரிந்த பல ஆயிரம் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி சிகிச்சையளித்து, அவர்கள் குடும்பத்தோடுr சேர்த்து வைத்தவர் பாரத் வத்வானி. கலாசாரம், கல்வி போன்றவற்றில் அளித்த பங்களிப்புக்காக சோனம் வான்க்சக்கிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
யார் இந்த பரத் வத்வானி: பாரத் வத்வானியும் அவர் மனைவியும், தெருவில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். பின்னர் இப்பணிக்காக சாரதா மறுவாழ்வு பவுண்டேசன் என்ற அமைப்பை 1988ல் துவக்கினர். தெருக்களில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இலவச தங்குமிடம், உணவு, மனநல சிகிச்சைகள் அளித்து குடும்பத்தாரோடு சேர்த்து வைத்தனர். இவர்களுக்கு காவல்துறை, சமூக சேவகர்கள் உதவியாக இருந்தனர்.
யார் இந்த சோனம் வாங்சுக்?: 1988ல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த சோனம் Students' Education and Cultural Movement of Ladakh என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் லடாகி இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பணி நடைபெறுகிறது. பொது தேர்வுகளில் இந்த இன மாணாக்கர்கள் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாத சூழலில் ஆரம்பிகப்பட்ட, இந்த அமைப்பின் சேவை முக்கியத்துவம் பெற்றது.
1994ல் ONH என்ற அமைப்பு நிறுவப்பட்டு, கல்வி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 700 ஆசிரியர்கள் உட்பட பலருக்கும் பயிற்சி வழங்கப்பட்டதால், 1996ல் 5 சதவீதமாக இருந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2015ல் 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவர்கள் தவிர, கம்போடியாவின் யூக் ச்சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ்r மார்டீன்ஸ் குரூஸ், பிலிப்பைன்சின் ஹோவர்ட் டே மற்றும் வியாட்நாமின் தி ஹோவாங் யென் ரோம் ஆகியோரும் ரமன் மகாசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive