பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு,
அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, புதிய பாடத்திட்டத்தில், பருவ தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளன
கால அவகாசம் இருக்காது எனும் நிலையிருப்பின், இந்த முறை, அந்தந்தப் பள்ளிகளுக்கு ஏற்றவாறு தேர்வினை நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கலாம்..
ReplyDeletestudents expect blue print of question paper as they were used to prepare based on the blue print. Questions can be of any type. But syllabus and question pattern will give them more confident.
ReplyDelete