ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் 10 மாடல் செல்போன் விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.
செல்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் முட்டிமோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் சத்தமில்லாமல் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. கடந்த மே மாதம் வெளியான ஹானர் 10 மாடலில் மட்டும் இதுவரை மொத்தம் 30 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளன.
இதை அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் கூறியுள்ளது. முதல் மாதத்தில் 10 லட்சம் போன்கள் விற்பனையாகி இருந்தது. அதைக் கணக்கிடுகையில் சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 10 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளன.
XDA டெவலப்பர்ஸ் கூறியுள்ள தகவலின்படி,ஆன்லைன் விற்பனையில் அதிகம் விற்பனையான ஃப்ளாக்ஷிப் போன் ஹானர் 10 தான் எனக் கூறப்படுகிறது.மேலும், ரஷ்யாவில் ரூ.27,500 -ரூ. 33,000 விலைக்குள் உள்ள போன்களில் அதிகம் விற்பனையான மாடலும் இதுதான் எனக் கூறப்படுகிறது. ஃபிரான்ஸைப் பொறுத்தவரை ரூ.23,900 - ரூ.31,800 விலைக்குள் ஆன்லைனில் அதிகம் விற்பனையான இரண்டாவது போன் இதுதான் எனக் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
5.84 இன்ச் திரை, ஆண்ட்ராய்டு 8.1,octa-core HiSilicon Kirin 970 SoC, 6GB+128GB, 24 மெகா பிக்ஸல் கேமரா,ஏஐ போட்டோகிராபி, 24 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா,3,400mAh பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை தோராயமாக ரூ.32,999. ஃப்ளிப்கார்ட்டில் இந்த போன்கள் கிடைக்கின்றன
I am going to bye Honor 10 Phone very soon with pleasure.
ReplyDelete