மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி
(பி.எப்.,) அலுவலகம் ஆன்லைன் செட்டில்மென்ட்டில் சிறப்பாக செயல்படுகிறது," என மத்திய கூடுதல் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் மதியழகன் தெரிவித்தார்.மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் படிவங்கள் தாக்கல் செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதியழகன் பேசியதாவது:
மதுரை மண்டலம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தற்போது பி.எப்., சந்தாதாரர்களுக்கு துரித சேவையாற்றும் வகையில் ஆன்லைன் மூலம் படிவம் தாக்கல் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பி.எப்., தொகை பெறுவதற்கு தற்போது ஒருங்கிணைந்த படிவம் தாக்கல் செய்யும் எளிய முறை பின்பற்றப்படுகிறது. ஆன்லைன் மூலம் படிவம் தாக்கல் செய்வது பழமையும், புதுமையும் இணைக்கும் நடவடிக்கை ஆகும். ஆன்லைன் செட்டில்மென்ட்டில் மதுரை மண்டல அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறது, என்றார்.மண்டல கமிஷனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கோவை மண்டல பி.எப்., கமிஷனர் முத்துசெல்வன், மதுரை மண்டல அலுவலக உதவி கமிஷனர் விக்னேஷ்வரன், பி.எப்., சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் நிர்வாகிகள், மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்றனர். ஆன்லைன் படிவம் தாக்கல் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...