தமிழகத்தில் இன்று மருத்துவப்படிப்பிற்கான தர வரிசை பட்டியலும், பொறியியல் படிப்பிற்கான தர வரிசை பட்டியிலும் வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டனர்.
இந்த தர வரிசை பட்டியல்களில் பொறியியல் படிப்பில் கோவை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். அதுபோல மருத்துவ தரி வரிசை பட்டியலில் ஏற்கனவே நீட் தர வரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்த சென்னையை சேர்ந்த கீர்த்தனா முதலிடத்தை பிடித்து உள்ளார். இரண்டு கீர்த்தனாக்கள் முதலிடத்தை பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல், சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில்,துணைவேந்தர் சூரப்பான முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.
அன்பழகன் வெளியிட்டார். அதில் முதல் இடத்தை கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா பெற்றிருந்தார். மேலும், பட்டியலில் முதல் 10 பேர் 200/200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த பட்டியலில் முதலிடத்தை கோவை கீர்த்தனாவும், 2வது இடத்தை மதுரையைச் சேர்ந்த ரீத்விக்கும் பிடித்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் சென்னையைச் சேர்ந்த எந்த மாணவ மாணவியரும் இடம்பிடிக்கவில்லை.
அதுபோல மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியலில், முதலிடத்தை சென்னையை சேர்ந்த கீர்த்தனாவும், 2வது இடத்தை தருமபுரியைச் சேர்ந்த ராஜ் செந்தூர் அபிசேக் பெற்றுள்ளனர். மருத்துவ தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் சென்னையை சேர்ந்த மாணவ மாணவிகள் 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.
மருத்துவ தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ள சென்னையை சேர்ந்த கீர்த்தனா, ஏற்கனவே வெளியான நீட் தேர்[வ முடிவில் அகில இந்திய அளவில் பன்னிரண்டாவது இடத்தையும், தமிழகத்தில் முதலாவது இடத்தை பிடித்திருந்தார். அதுபோல ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர் வில் 5வது இடத்தையும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத் (எய்ம்ஸ்) தேர்வில் 31-வது இடத்தையும் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
இவர் தனது கனவு படிப்பான மருத்துவமனை டில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த படிக்க விரும்புவதாக தெரிவித்துஉள்ளார்.
அதுபோல பொறியியல் தர வரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள கோவை கீர்த்தனா, ஏற்னவே டில்லி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கெமிஸ்டிரி சேர்ந்து படித்து வருகிறார். தனது கனவு ஐஏஎஸ் என்று தெரிவித்து இ இவர் பொறியியல் சேர்ந்து படிப்பது குறித்து, விரைவில் முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...