ஜியோவின் அதிரடி டேட்டா சலுகை!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 4.5 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 திட்டத்தில் முன்னதாக, 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதில் வாடிக்கையாளர்கள் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் இலவச அழைப்புச் சலுகையையும் பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு ரூ.299 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 126 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு இலவச அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் தினசரி 4.5 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவைப் பெறலாம்.ஆனால், இத்திட்டம் ஜூன் 30 வரையிலான கால வரம்புக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் ஜியோ நிறுவனம் தனது மேலும் சில திட்டங்களையும் புதுப்பித்துள்ளது. ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கும், ரூ.349 கட்டணத்தில் 70 நாட்களுக்கும், ரூ.399 கட்டணத்தில் 84 நாட்களுக்கும், ரூ.449 கட்டணத்தில் 91 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும். அதேபோல, ரூ.509 திட்டத்தில் தினசரி 5.5 ஜிபி டேட்டாவும், ரூ.799 கட்டணத்தில் தினசரி 6.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...