ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர்
( மாநில சிறப்புத் தலைவர்: நல்லாசிரியர்
திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்)
அன்பார்ந்த
பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி
உயர்வு சார்ந்த பல்வேறு வழக்குகளால் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பணியிடங்கள் காலியாக உள்ளன.
மிகுந்த
எதிர்பார்ப்புடன் பரபரப்பான சூழ்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அதாவது
04.06.2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர் திரு.
ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தீர்ப்பினை வழங்க இருக்கிறார்கள்.
இவ்வழக்கானது 41 ஆவது வழக்காக இடம் பெற்றுள்ளது.
உயர்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வானது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே
வழங்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடன் எமது இயக்கம் நல்லாசிரியர் திரு. ஆ.
வ. அண்ணாமலை அவர்களின் தலைமையில் பத்து ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
அவற்றிற்கெல்லாம் ஒரு நல்ல பலனளிக்கும் வகையில் தீர்ப்பு அமையும் என்ற
நம்பிக்கயோடு காத்திருக்கிறோம்.
இவண்,
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.
ரொம்ப முக்கியம்....
ReplyDeleteஉங்கள் போராட்டம்
எந்த பதவி உயர்வும் இல்லாமல் காத்திருக்கிறோம்.
Deleteபட்டதாரி ஆசிரியர்கள்.
தேவையற்ற, புரிதலற்ற போராட்டம்.இரண்டாண்டுகளாய் பதவிஉயர்வினை தடுத்து நிறுத்தியதே பலன்.பங்காளிச்சண்டைமாதிரி அனாவசிய ஈகோ போராட்டம்.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போகாலியாகும்னு காத்துக்கொண்டிருந்த வன்மப்போராட்டம்.
Deleteபாவம் பல பேர் பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற்று விட்டனர்,பட்டதாரியும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறான்,பதவி உயர்வு பெற்ற மு.க.ஆசிரியனும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறான்,விளைவு 1300+ காலியிடங்கள்,அரசு பொது விதி அல்லது சிறப்பு விதி ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும் அல்லது இதற்கெல்லாம் ஒரே தீர்வு பதவி உயர்வை ஒழித்து விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மாநில தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வு எழுத வைத்து தேர்வு செய்ய வேண்டும்...அப்போது தான் திறமையான,நிர்வாக தலைமைப் பண்புடன் கூடிய ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக வருவார்கள்,,,,எத்தனையோ தலைமை ஆசிரியர்கள் அப்பதவிக்கு லாயக்கு இல்லாமல் இருக்கிறார்கள்...
ReplyDeleteGood bro
Deleteதேவையற்ற வழக்கால் பேனலில 200 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர், இதனால் பணப்பபலனை பதவி உயர்வையும் இழந்துள்ளனர், இவர்களின் சாபமும், வயித்தெரிச்சலும் காரணமானவர்களை சும்மா விடாது
ReplyDeleteHowever, if the debtor persuades a judge to grant their proposed motion to vacate the judgment, you must give them all their money back, and sometimes more.Top Toronto criminal defence lawyers
ReplyDelete