இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள வட்டாரங்களில் மாலை அல்லது பகல் நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இதற்கு வெப்பச்சலனம் தான் காரணமாக கூறப்படுகிறது.
அதே வேளையில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் மட்டும் தமிழகத்தில் 32 மி.மீ அளவுக்கு மழை பெய்து உள்ளது.. சராசரியாக 27 மி.மீ பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரையில் மணிக்கு 50 கிலோ மீட்டர் அளவிற்கு காற்று வீசும்.
சென்னையை பொறுத்தவரை அதிக வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
மீனவர்கள் கடலுக்குள் செல்ல கூடாதாம்…!
தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
அதிக பட்ச வெயிலின் காரணமாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழை காரணமாக பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...