கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. தமிழக பாடத்திட்டத்தில், இன்று(ஜூன் 1) முதல், 2018 -
19ம், கல்வி ஆண்டு துவங்குகிறது.
தமிழக பாடத்திட்டத்தில் படிப்போருக்கு, ஒவ்வொரு வருடமும், ஜூனில் கல்வி
ஆண்டு துவங்கி, மே மாதம் முடிவடையும். ஏப்ரலில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு
இறுதி தேர்வுகள் நடத்தப்படும். இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், பொது
தேர்வுகளும், ஆண்டு இறுதி தேர்வுகளும் முடிந்து, அதற்கான முடிவுகளும்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஏப்ரல், 21ல் துவங்கிய 41 நாட்கள் தொடர் கோடை விடுமுறை
முடிந்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, இன்று அனைத்து பள்ளிகளும்
திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, இலவச சீருடைகள்
உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. சில தனியார் பள்ளிகள் மட்டும், பள்ளி திறப்பை,
4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன.
புதிய கல்வி ஆண்டு துவங்குவதை ஒட்டி, மாணவர்கள் தேர்ச்சியின் அடிப்படையில்,
இன்று புதிய வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர். பல பள்ளிகளில், புதிய
வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு, வாழ்த்து கூறுவதோடு, இனிப்புகள்
வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு
பிரார்த்தனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...