Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி – கல்லூரி கேண்டீன்களுக்கு எச்சரிக்கை..! சுகாதாரத்துறை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் உள்ள கேண்டீன் 

மற்றும் விடுதி உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்
சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகள், தனியார் பள்ளி கல்லூரிகளில் செயல்படும் கேண்டீன் மற்றும் மாணவர் விடுதியில் உள்ள உணவகங்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகளை வகுத்து சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உணவங்களில் பயன்படுத்தும் எண்ணெய்யை ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யில் பல்வேறு பொருட்களை பொறிக்கவோ வறுக்கவோ பயன்படுத்தினால் அந்த உணவானது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளனர். உணவில் வனஸ்பதி , டால்டா போன்றவற்றை சேர்க்க கூடாது, அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் மாணவர்களின் உடல் நிலையை பாதிக்கும்..!
உணவகங்களில் சமைத்த உணவுகளை 2 மணி நேரத்திற்கு உள்ளாக மாணவர்களுக்கு பறிமாரி முடிக்க வேண்டும் அதற்கு மேல் நேரமானால் உணவின் தன்மை மாறிவிடும்..! சமையல் செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவ சான்று இருக்க வேண்டும், தொற்று நோய் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்..!
தலையில் உள்ள முடி சாப்பாட்டில் விழுந்து விடாமல் இருக்க சமையல் கலைஞர்கள் தலையில் டர்பன், மற்றும் தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்திருப்பது அவசியம்..! சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை 50 பிபிஎம் அளவு குளோரின் கலந்த நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்..!
மீன் மற்றும் இறைச்சி வகைகளை குளிர்சாதன் பெட்டியின் மேல் அடுக்கில் வைக்க கூடாது. அடியில் வைத்திருக்க வேண்டும் மேல் அடுக்கில் காய்கறிகளை வைத்திருப்பது நலம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர் குளிர்சாதனப்பெட்டியை இரவில் சுவிட்ஜ் ஆப் செய்தால் அதில் உள்ள இறைச்சி மற்றும் காய்கறிகள் கெட்டுபோகும் எனவே அப்படி பட்ட நடவடிக்கை கூடாது.
ஒவ்வொரு முறை உணவு சமைத்து முடித்த பின்னரும் அதில் 250 கிராம அளவு கொண்ட உணவை மாதிரியாக எடுத்து வைக்கவேண்டும். சாப்பிட்டவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அந்த உணவை சோதித்து பார்த்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்..! கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேண்டீன் மற்றும் உணவகம் நடத்த ஒப்பந்தம் எடுக்கும் அனைவருக்கும் பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் இதனை அறிவுறுத்த வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத பள்ளி கல்லூரிகள் மீது 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பள்ளி மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றாத பள்ளி கல்லூரி உணவகங்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டம் 2006 மற்றும் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டம் 2011 கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவுப்பாதுகாபு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive