உடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை இது
உங்களுக்கு நிச்சயம் பயன் தரும்
பயனுள்ள உணவுமுறை சுலபமாக கிடைக்கும் ஒரு அற்புத மருத்துவ உணவு முறை உங்கள் பருமன் உடல் எடை பக்க விளைவு இல்லாமல் வெகு சீக்கிரமாக குறைக்க சிலவு குறைவான சுலபமான மருத்துவ முறை
கொள்ளுப் பருப்பை இரவு தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளிஏறும்
தினசரி கூடாது.
உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்
கொழுப்பை குறைக்க பகலில் ஒரு எட்டு மணிநேரமாவது கொள்ளை ஊறவைத்து பின் ஊரறிய நீரை குடித்துவிட்டு வேறு தண்ணீர் விட்டு வேகவைத்து ( பிரஷர் குக்கர் ஈசி) இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் வயிற்று கொழுப்பு வெகுவிரைவில் கரையும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். தினசரி கூடாது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் வேகவைத்த அந்த பருப்பை மசித்து குழம்பு செய்யலாம் கொள்ளு துவையல் செய்து ஒரு நாள் சாப்பிடலாம்

கொள்ளு, ஜீரகம், சிறிது மிளகு வாசனை வரும் வரை வறுத்து சூடு ஆறிய பின் சிறிது பெருங்காயம் மற்றும் பூண்டு ( வறுக்க தேவை இல்லை), உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு நீங்கள் சாப்பிடும் கடைசி இரண்டு உருண்டை சோற்றில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியை சேர்த்து குழம்போடு குழைத்து சாப்பிடலாம்
கொள்ளு ரசம் அதே பொடியை வைத்து செய்யலாம் வேறொரு நாள வறுத்த கொள்ளை ஒன்றுக்கு இரண்டாக உடைத்து
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பருகலாம். இது தாதுவை பலப்படுத்தும். குதிரை சாப்பிடும் கொள்ளு மனிதனுக்கு அத்தனை ஆற்றல் கொடுக்க வல்லது.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பருகலாம். இது தாதுவை பலப்படுத்தும். குதிரை சாப்பிடும் கொள்ளு மனிதனுக்கு அத்தனை ஆற்றல் கொடுக்க வல்லது.
கொள்ளு சூப்
சளித்தொல்லைக்கு நல்ல மருந்து. மார்பு சளியை இதன் உஷ்ணம் நீர்க்க செய்துவிடும். தற்போதய ஆராயச்சியில் பித்தப்பை கற்களைஅகற்றும் தன்மை கொள்ளுக்கு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்
ஆப்பிள் சைடர் வினிகர்
காலையில் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு டீஸ்பூன் விட்டு சிறிதளவு இஞ்சி தோல் நீக்கி துருவி அதோடு சேர்த்து பருகலாம்
வினிகருக்கு பதிலாக எலுமிச்சை சாரும் உபயோகிக்கலாம்
வினிகருக்கு பதிலாக எலுமிச்சை சாரும் உபயோகிக்கலாம்
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பூண்டு வேகவைத்து மசித்து பால் சேர்த்து இரவில் பருகலாம்.( ஆஸ்பிரின், warfarin ) போன்ற மருந்து உண்பவர்கள் மருத்துவ ஆலோசனை படி செயுங்கள். பூண்டு ரத்தத்தை நீர்த்து போகச்செய்யும் தன்மை உடையது.
நம்ம ஊர் சிறுதானியங்களை இட்லி தோசை புட்டு செய்து சாப்பிடுங்கள். ஒரு நாள் ஒரு முறை அரிசி போதும். அப்படி அரிசி தேவை என்றல் சோற்றின் அளவை குறைத்து பொரியலை கூட சேர்த்து கொள்ளுங்கள்
உடல் எடையை குறைப்பது எப்படி கார்போஹைட்ரெட் அளவை குறையுங்கள்
கார்போஹைட்ரெட் அளவை குறையுங்கள் சாப்பாட்டில் மிதமான கொழுப்பு தேவை. ஏ,டி, ஈ,கே வைட்டமின்களுக்கு கொழுப்பு தேவை உடல் கிரகிக்க. கொழுப்பை அறவே நீக்கினால் கிழடு தட்டிவிடுவீர்கள். நீங்கள் குறைக்க வேண்டியது (வனஸ்பதி, கண்களுக்கு தெரிகின்ற மிருகக்கொழுப்பு). கார்போஹைடிரேட்டை குறைத்தால் நம் உடம்பு கொழுப்பை உபயோகிக்க தொடங்கும். வயிறு முட்ட சோறு, பிரட், சாப்பிடும் வரை கொழுப்பை உபயோகிக்க உடம்பு மறுக்கும்.

நார்ச்சத்து எடுக்கும் பொது வயிறு நிரம்பியதை போல ஒரு உணர்வு ஏற்படும். மாத்திரம் அல்ல குடலில் உள்ள அழுக்கை பிரஷ் செய்து வெளியே கொண்டுவரும். அதனால் சப்பாத்தி செய்யும் பொது சிறிது கோதுமை தவிடு, ஓட்ஸ் தவிடு சேர்த்துக்கொள்ளலாம். மாவை கூடுதல் சலிப்பதால் அதன் நார் சத்தை நாம் நீக்குகிறோம்.
காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் நாம் கேள்விப்பட்டது தானே?
காலையில் டீயில் சிறிது இஞ்சி, மதியம் சுக்கு மல்லி காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை இளம்சூடான நீரில் கலந்து குடிக்கலாம். ஏதாவது மருந்து மாத்திரை அல்லது மருத்துவர் மேற்பார்வையில் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
கடுக்காய் உடம்பை சுத்தம் செய்ய வல்லது. தாய் ஊட்டாததை கடுக்காய் ஊட்டும் என்ற சொல் உண்டு.
திரிபலா சூரணமும் கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது.
சுமார் ஐந்து முதல் ஆறுமணி நேரம் தண்ணீரில் ஊறிய இரண்டு அல்லது மூன்று கரண்டி சியா சீட்ஸை எலுமிச்சை ஜூஸ் அல்லது எந்த பழசாரோடும் கலந்து குடிக்கலாம். இல்லை ஊறவைத்த சியா சீட்ஸை அப்படியே சாப்பிடலாம்.

கொத்தமல்லி விதை சிறிது எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்கும் இடையில் ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை பருகலாம்.
சோற்றின் அளவை(அல்லது எந்த அரிசி பதார்த்தத்தை குறைத்து பொரியல் அளவை கூட்டுங்கள்)
அறுசுவையும் ஆரோக்கியமே
அறுசுவையும் ஆரோக்கியமே எனவே எதையும் ஒதுக்க வேண்டாம் ஆனால் அளவை குறையுங்கள் அல்லது அதற்கு பதில் குறைந்த கலோரி ஏதாவது உண்டா என்று யோசியுங்கள்.
அறுசுவையும் ஆரோக்கியமே எனவே எதையும் ஒதுக்க வேண்டாம் ஆனால் அளவை குறையுங்கள் அல்லது அதற்கு பதில் குறைந்த கலோரி ஏதாவது உண்டா என்று யோசியுங்கள்.
காலையில் அரிசி இட்லி, மதியம் அரிசி சாதம், மாலையில் சோறு அல்லது சப்பாத்தி. எப்படி எடை குறையும்?
வாழ்க்கை முறை மாற்றத்தை உடனே திணிக்காதீர்கள். ஒரு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் கார்போஹைட்ரெட் அளவை குறைக்கவும். தினமும் வேண்டாம், தொடர்வது கடினம். வாரம் மூன்று நாட்கள், ஒரு மாதம் பனிரெண்டு நாட்கள் கார்போஹைட்ரெட் குறையும். அதன் பலனை நம்மால் உணரமுடியும். அப்போ மூன்று மாதம்? ஆறு மாதம் ? அப்படி தான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யவேண்டும். அந்த மூன்று நாட்களும் காலையில் ராகி மால்ட், கம்பங்களி/ கூழ், ஓட்ஸ் கூழ், ஓட்ஸ் அல்லது கம்பு, ராகி, இட்லி/புட்டு. சைடு டிஷ் நல்ல ருசியானதாக உங்கள் விருப்பம். மதியம் சாமை சோறு அல்லது தினை/குதிரைவாலி பொங்கல்,
இரவு சாமை/வரகு அரிசி கஞ்சி பூண்டு, வெந்தயம், சிறி சுக்கு பொடி சேர்த்து. தொட்டு கொள்ள காய்கறி, கோழி, கண்ணுக்கு தெரிகின்ற கொழுப்பு நீக்கப்பட்ட மட்டன், அதுஉங்கள் விருப்பம். அதை சுவையாக ஆக்குவது நம் கையில். கார்போஹைட்ரெட் அதிகம் இல்லாத சைடு டிஷ்.
இது அல்லாத மற்ற நாட்களில் கொள்ளு பருப்பு மற்றும் ஏனைய பிற குறிப்புகளை பின்பற்றலாமே…. ஆப்பிள் சீடர், இஞ்சி நீர், பூண்டு பால், கடுக்காய், திரிபலா,,.
முட்டைகோஸ் பொரியல், வாழை தண்டு பொரியல், பீன்ஸ் பொரியல் மற்றும் நீர் காய்கறியாக சோவ் சோவ், சுரைக்காய், உடல் எடை குறைக்க சிறந்தது. நிறைய சாப்பிடுங்கள் சாதத்தின் அளவை குறைத்து.
நம் தட்டில் என்ன வைத்து இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் பாத்தால் தானாகவே வரும் குற்ற உணர்வு
முடிந்த வரை நடந்து செல்லுங்கள். எப்போதும் நம் உடம்பில் ஒரு அசைவு வேண்டும். வெறும் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு இருப்பதை விட மொத்த உடல் அசைவு என்றால் சிறப்பு
கற்றாழை சாறு அல்லது கேப்ஸுல், நெல்லிக்காய் , நல்லது
சிறிதளவு நசுக்கி வேகவைத்த இஞ்சி தண்ணீர்,
எலுமிச்சை சாறு எடுக்கும் பொது தோலை வீண் செய்யாமல் பழத்தை தோலோடு சிறு துண்டுகளாக்கி விதைநீக்கி, சிறு துண்டு இஞ்சி, ஒண்டிரண்டு புதினா இலைகள் செய்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய ஜூஸ்,
அரை தேக்கரண்டி சோம்பு வேகவைத்த நீர்
ஜீரக தண்ணீர்,
போன்றவற்றில் ஒன்றை மாற்றி ஒன்று ஒவ்வொரு நாளும் செய்ய எடை மெதுவாக குறையும்

சீனி உங்களை கொல்லும்
சிலவேளைகளில் ஐஸ் கிரீம், பர்கர், சாக்லேட் போன்றவைகள் சாப்பிட நேரிடும். அதனால் ஒன்றும் இல்லை. அடுத்தவேளை மாவு சத்தில் கவனம் வையுங்கள். எதையுமே நம் சரீரத்துக்கு கொடுக்காமல் இருக்க வேண்டாம். சாப்பிடும் அளவில் தான்அத்தனை பிரச்சினையும் உள்ளது.
ஒன்று மட்டும் உறுதி. சர்க்கரை(சீனி) உங்களை கொல்லும் கருப்பட்டி உபயோகிங்கள்.

உடல் எடையை குறைக்க விளம்பரங்களில் வரும் மருந்துகளை உண்பதில் கவனம். எல்லாம் தவறல்ல, ஆனால் சில மருந்துகள் கிட்னியை பாதிக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...