இந்தியா முழுக்க வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாடு முழுவதும் தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டதால் இப்படி செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக சில மாநிலங்களில் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு பேஸ்புக்கை கட்டுப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் பல எதிர்ப்புகளுக்கு இடையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
கூட்டம்
இந்தியாவில் தேச விரோத சக்திகளும், தீவிரவாதிகளும் அதிகரித்து இருப்பதாக கூறி, நேற்று மத்திய பாதுகாப்பு துறை முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தியது. தொலைத்தொடர்பு துறையும், பாதுகாப்பு துறை நிர்வாகிகளும் இதில் இருந்தனர். பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தேச விரோத செய்திகள் எப்படி பரவுகிறது, எப்படி தீவிரவாதிகள் தொடர்பு கொள்கிறார்கள் என்று விவாதிக்கப்பட்டது.

என்ன நடக்கிறது
அதன்படி வாட்ஸ் ஆப் மூலமே அதிகமாக சமூக விரோதிகள் தங்களுக்கு இடையில் செய்திகளை பரிமாறிக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான செய்திகளை புகைப்படங்களாக இவர்கள் ஷேர் செய்து கொள்கிறார்கள். மேலும் வாட்ஸ் ஆப் வீடியோ கால், வாட்ஸ் ஆப் கால் மூலமே காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் அரசின் கண்காணிப்பை மீறி தங்களுக்கு இடையில் பேசிக் கொள்வதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் ஆப்பை முடக்க திட்டம்
வாட்ஸ் ஆப் சமீப காலமாக நிறைய பாதுகாப்பு அம்சங்களை தருகிறது. இதனால் இருவர் பேசிக்கொள்ளும் செய்திகளை பிறர் வேவு பார்க்க முடியாது. இதனால் வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் இது குறித்தே விவாதிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்புகள் வெளியாகும்.

தொடக்கம்
இதன் முதற்கட்டமாக, மத்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் போன்ற சில வசதியை மட்டும் தடை செய்ய இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இந்த தடையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் இன்னும் சில நாட்களில் இந்த தடை அமலுக்கு வரலாம்.

super
ReplyDelete