திருவள்ளூரில் மின்னலை செல்போனில் படம் பிடித்தவர் கதிர்வீச்சின் ஈர்ப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது. மதியம் 3
மணிக்கு மேல் வானிலை மாற்றம் அடைந்து, மாலையில் மழை பெய்தது. புழல்,
செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி
நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால்
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம்
ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கனமழை பெய்யும் நேரத்தில் இவர், தனது
நண்பர்களுடன் சுண்ணாம்பு குளம் பகுதியில் இறால் பண்ணையை பார்வையிட
சென்றுள்ளார். அப்போது, அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. மின்னலை
கண்ட ரமேஷ், அதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அப்போது செல்போனின் கதிர்வீச்சால் இழுக்கப்பட்ட மின்னல், ரமேஷின் முகம்
மற்றும் மார்பில் தாக்கியுள்ளது. இதில் கருகியதும், பலத்த காயமடைந்த ரமேஷ்
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்பாக்கம்
காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரமேஷ் உடல் மீட்கப்பட்டது.
காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...