வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் இனி பார்வேர்ட் மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட உள்ளது. பல பிரச்சனைகளை தீர்க்க இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மெசேஜ் டெலிட் செய்யும் வசதிகளையும் கொண்டு வந்தது.
என்ன அப்டேட்
இப்போது வர இருக்கும் அப்டேட்டில் நிறைய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பார்வேர்ட் மெசேஜ்களை காட்டிக் கொடுப்பது. நாம் ஏற்கனவே வந்த மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்ட் மெசேஜ் என்ற லேபிள் இருக்கும்.
மாற்றலாமா?
இது வர இருக்கும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. இதை யாரும் மாற்ற முடியாது. கண்டிப்பாக நாம் பார்வேட் மெசேஜ் அனுப்பினால் பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும். பிறர் நமக்கு அனுப்ப கூடிய பார்வேர்ட் மெசேஜ் குறித்த விவரமும் இதில் இருக்கும். ஆனால் யாரிடம் இருந்து பார்வேர்ட் செய்கிறார் என்ற விவரம் இதில் இருக்காது.
ஏன் இப்படி
இதன் மூலம் அதிக பார்வேர்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுவது குறையும். அதேபோல் போலியான மெசேஜ்களை அதிகம் அனுப்புவது குறையும். பிறர் அனுப்பிய மெசேஜ்களை நாமாக அனுப்புவது போல ஏமாற்றுவதும் குறையும். முக்கியமாக ஒரே மெசேஜை பலருக்கு பார்வேர்ட் செய்து டார்ச்சர் செய்வதும் இனி அடியோடு குறையும்.
எப்போது வரும்
தற்போது வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது. அதேபோல் இதில் வாட்ஸ் ஆப் கேலரி என்று வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அது உறுதியாக வருமா என்று அறிவிக்கப்படவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...