நீட் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட்
கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ேக.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வில் தவறான 49
வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்
அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் மதிப்பெண்
அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’
என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று
மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல்
என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ‘‘தேர்வு முடிந்ததும் ‘கீ ஆன்சர்’ கூட முறையாக
வெளியாகவில்லை. வினா - விடைகள் தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை
மாணவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது,’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.டி.செல்வம், ‘‘தமிழக மாணவர்கள் மிகுந்த மன
அழுத்தத்துடன் தான் ஏற்கனவே தேர்வு எழுத சென்றனர். எந்த மன நிலையில்
தேர்வெழுதியிருப்பார்கள்? இதில், தவறான மொழிமாற்ற வினா-விடைகளை அவர்களால்
புரிந்து ெகாள்ள முடியுெமன எப்படி அரசு தரப்பால் யூகிக்க முடிகிறது,’’
என்றார்.அப்போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல், ‘‘ஏற்கனவே தேர்வு
முடிவுகள் வௌியிடப்பட்டு விட்டன. தேர்வின்போது வினாத்தாளில் ஏதேனும் தவறு
இருந்தால், ஆங்கிலத்தில் சரியாக இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில வினா-விடைகள் சரியாகவே
உள்ளன,’’ என்றார்.
இதையடுத்து, ‘‘தமிழக மாணவர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டியுள்ளது.
எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலர், சிபிஎஸ்இ தலைவர், நீட்
தேர்வுக்கான துணைச் செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் தரப்பில்
பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில்மனுவை பொறுத்து இந்த நீதிமன்றம்
உத்தரவு பிறப்பிக்கும்,’’ எனக்கூறிய நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூன்
27க்கு தள்ளி வைத்தனர்.
பீகாரில் எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்
விசாரணையின்போது மூத்த வக்கீல் கூறுகையில், ‘‘பீகார் மாநிலத்தில் 35,641
பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், 37,899 பேர் தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள்
அதிகமாக உள்ளனர். நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, நீட்
தேர்வு முடிவுகள் அடிப்படையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க
வேண்டும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...