பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
பதிவு எண்: 100/92
மாநில சிறப்புத் தலைவர்: நல்லாசிரியர் திரு. ஆ.வ. அண்ணாமலை அவர்கள்.
தகவல்:
ப.நடராசன் , மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வின் தீர்ப்பு நம்முடைய இயக்கப் போராட்டத்தின் ஒரு திருப்பு முனையாகும்.
விதி 9 ஆனது பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பு நம்முடைய பத்தாண்டு கால நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
இது நாள் வரை முதுகலை ஆசிரியர்கள் விதி 9 ஐப் பின்பற்றித்தான் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினைப் பெற்று வந்தார்கள்.
நம்முடைய வழக்கறிஞர் மூலமாக அவ்விதி அவர்களுக்குப் பொருந்தாது என நாம் வாதிட்டோம்.
எதிர்பார்த்தவாறே விதி ஒன்பதானது பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களுக்குப் பொருந்தாது என மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விதி 9 ஆனது பொருந்தவில்லை என்பதால் முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு எந்த விதியும் இல்லை. ஆகவே, விதிகளுக்கு மாறாகத்தான் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
சார்நிலைப் பணியாளர் விதிப்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் மட்டுமே வர முடியும். அதுதான் நடக்கும். அதுதான் நடக்க வேண்டும்.
இவ்வழக்கிற்காக அல்லும் பகலும் எம்மோடு இணைந்து பணியாற்றி உழைத்த நமது இயக்கத்தின் அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் பெருமக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியையும் எடுத்துவிட்டால் ரொம்ப நல்லது.கடந்த பல ஆண்டுகளாக பொறுப்பு ஆசிரியரே மிகவும் சிறப்பாக பள்ளியை நடத்திவருகிறார்கள்.
ReplyDelete