மதுரை/ந மதுரை தி நெட்/ஸ்லெட் சங்க தலைவர் மதுசூதனன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
உதவி பேராசிரியர் பணிக்காக மாநில தகுதித் தேர்வு
(செட்) மார்ச் 4 ல் நடந்தது. இதை கொடைக்கானல் அன்னை தெரசாமகளிர் பல்கலை
நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் இடம் பெற்றிருந்த 43 வினாக்கள் எவ்வித
மாற்றமும் இன்றி, தற்போதைய தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன. இதனால் தேர்வின்
தரம் குறைந்து விடும். நோக்கம் நிறைவேறாது. வினாத்தாளை திறம்பட தயாரிப்பது
அவசியம். தரமான வினாக்களை வடிவமைக்க வேண்டும். அதனடிப்படையில்மறு தேர்வு
நடத்த வேண்டும் என பல்கலை மானியக்குழு, தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச்
செயலாளர், அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க
உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் சி.டி.செல்வம்,
ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு விசாரணையை அடுத்தவாரம் ஒத்திவைத்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...