நகம் கடிப்பது என்பது சிறுகுழந்தை முதல் பெரியோர் வரை எல்லோர்க்கும் உள்ள
ஒன்றுதான். ஆனால் நகம் கடிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நகம் கடிக்கும் பழக்கம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒன்று. நம்மை அறியாமலேயே நகத்தை கடித்துக் கொண்டிருப்போம். நகம் கடிப்பது தவறான பழக்கம் இல்லை என்றாலும் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நகம் கடிக்கும்போது அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால் அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும். இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவ சில வழிமுறைகள் உள்ளன்; நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் இறுக்கமான சூழலை உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகக்கூடும். ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
ஆகையால் நகத்தை சரியாக பராமரிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...