மதுரை, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரையின், நியமன உத்தரவை
உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால், பல்கலையை நிர்வகிக்க 'வழிநடத்தும் குழு'வை
தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய
மதுரை மாவட்டச் செயலர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை
காமராஜ் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு பேராசிரியராக
10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இல்லை. 'பல்கலை பாதுகாப்புக்குழுவைச்
சேர்ந்த பேராசிரியர் சீனிவாசனை தாக்கிய வழக்கில் செல்லத்துரை உட்பட சிலர்
மீது பதிவான வழக்கு நிலுவையில் உள்ளது. அவரது நியமனத்தை ரத்து செய்ய
வேண்டும்' என தெரிவித்திருந்தார். இதுபோல், 'டிராபிக்' ராமசாமியும் மனு
செய்தார்.சிண்டிகேட் கூட்டம்செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்த உத்தரவை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தது.தீர்ப்பு வெளியாகி
மூன்று நாட்களில், நேற்று பல்கலையில் சிண்டிகேட் கூட்டம் நடந்தது.
உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தலைமை வகித்தார்.துணைவேந்தர்
நியமிக்கப்படும் வரை பல்கலையை நிர்வகிக்க, சட்டத்துறை செயலர் பூவலிங்கம்,
சட்டக் கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் ராமகிருஷ்ணன்
அடங்கிய, 'வழிநடத்தும் குழு' அமைக்கப்பட்டது.துணைவேந்தரை தேர்வு
செய்வதற்கான தேடல் குழுவிற்கு சிண்டிகேட் உறுப்பினரும், திருச்சி
பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கமுத்துவை நியமிக்க முடிவு
செய்யப்பட்டது.தேடல் குழுவில் செனட் சார்பில் ஒருவர், தேர்தல் மூலம் தேர்வு
செய்யப்படுவார். வேந்தரான கவர்னர் சார்பில் ஒருவர்
நியமிக்கப்படுவார்.வெற்றிடம்சுனில்பாலிவால் கூறிய தாவது:உயர் நீதிமன்ற
உத்தரவுப்படி துணைவேந்தர் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. பல்கலையை
வழிநடத்த,குழு அமைக்கப்பட்டுள்ளது. செல்லத்துரை மேல்முறையீடு செய்து,
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை பெறும்பட்சத்தில், அவர் துணைவேந்தராக தொடர
தடையில்லை. துணைவேந்தரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...