Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாவல் பழம் சாப்பிடுவதால் 5 அருமையான நன்மைகள்



இனிப்பு மற்றும் துவர்ப்பு இரண்டும் சேர்ந்து பழம் என்றால் நாவல் பழம் மட்டுமே. நாவல் பழத்தில் உள்ள நன்மைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
நாவல் பழம் அன்டோசியான், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கிடைக்கிறது. நாவல் பழ மரங்கள் காடுகளில் வளர்கின்றன மற்றும் சாலையில் கூட வளரும்.
நாவல் பழத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது மற்றும் மற்ற பழங்களை ஒப்பிடும்போது நாவல் பழம் ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் குறைந்த கலோரி உணவு. நாவல் பழத்தில் கலப்பின வகைகள் விதையற்றவையாகும், அதேசமயத்தில் இயற்கை நாவல் பழத்தில் விதைகள் உள்ளது.
நாவல் பழம் நீரிழிவுக்கான சிறந்த சிகிச்சை உணவாக அறியப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் நாவல் பழம் விதைகள் இரத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பதில் உதவுகிறது என்று கூறுகிறார்கள். நாவல் பழம் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாவல் பழம் மரத்தின் மரப்பட்டை நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 1/2 டீஸ்பூன் மரப்பட்டை தூள் மற்றும் ஒரு கரண்டி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகம் செயலிழப்பதை தடுக்க முடியும். தண்ணீரில் கலந்து கூட மரப்பட்டை தூளை சாப்பிடலாம். தொற்று நோய் கட்டுப்படுத்தவும் நாவல் மர பட்டை உதவுகிறது.
நாவல் பழம் சாப்பிடுவது புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. நாவல் பழத்தில் பாலிபினால்களை, பைட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி அழிக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள ஆன்டோசியனின்கள், ஃபிளாவோனாய்டுகள், எலகாகிக் அமிலம் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை உறுப்புகளில் புற்றுநோயைத் தடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கின்றன. நாவல் பழத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழத்தின் சாறு வாய் துர்நாற்றம் நீங்க உதவுகிறது.
சில இந்து கலாச்சாரங்களில் நாவல் பழம் மரத்தின் இலைகள், பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழ மர பட்டையை எரித்து சாம்பல் ஆக்கி பற்கள் துலக்கினால் பற்கள் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.





1 Comments:

  1. seedless நாவல்பழம் சாப்பிட்டாலும் இதே பலன்கள் உண்டா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive