Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை

ஆந்திர மாநிலத்தில் கோடை கால விடுமுறைக்கு பின் கடந்த 12ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அங்கு கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை

.இந்நிலையில், ஆந்திராவில் வெயிலின் தாக்கம் மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என்று அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதையடுத்து நேற்று முதல் பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கண்டா சீனிவாஸ் கூறியதாவது:

 மாநிலத்தில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

 எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 19ம் தேதிமுதல் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

 தொடர்ந்து வருகிற 22ம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive