இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொரக்குகளில் ஒன்றான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , தனது ப்ரீபெயட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டபுள் தமாகா (Reliance Jio Double Dhamaka) என்ற பெயரில் தினசரி 1.5ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை வழங்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.
ஜியோ டபுள் தமாகா
சமீபத்தில் ஜியோ அறிவித்திருந்த ரூ. 100 விலை குறைக்கப்பட்ட ரூ. 399 பிளானை தொடர்ந்து ரூ. 20 வரை விலை குறைக்கப்பட்ட ரூ. 149 பிளான் ஆகியவற்றுடன் , நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் சலுகையை ஜூன் 12 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் செயற்படுத்த உள்ளது.
1.5 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை விபரம்
இந்த புதிய வாய்ப்பைக் கொண்டு, ஜியோவின் இந்த 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ரூ. 149 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த டபுள் தமாகா வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கூடுதலாக 1.5ஜிபி என மொத்தமாக நாள் ஒன்றுக்கு 3ஜிபி உயர் வேக டேட்டா வழங்கப்படுகின்றது.
இந்த புதிய வாய்ப்பைக் கொண்டு, ஜியோவின் இந்த 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ரூ. 149 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த டபுள் தமாகா வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கூடுதலாக 1.5ஜிபி என மொத்தமாக நாள் ஒன்றுக்கு 3ஜிபி உயர் வேக டேட்டா வழங்கப்படுகின்றது.
இதே போன்ற மற்ற திட்டங்களான ரூ 349, ரூ 399 மற்றும் ரூ 449 என இந்நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற தினசரி டேட்டா வரம்பு கொண்ட பிளான்கள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகின்றது. அதாவது நீங்கள் பயன்படுத்தும் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என்றால் இனி 3.5ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக இந்நிறுவனத்தின் 1.5ஜிபி டேட்டா நன்மை வழங்கும் ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 ஆகிய திட்டங்களில் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.
மேலும் இந்நிறுவனத்தின் 2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும்ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 ஆகிய திட்டங்களில் தற்போது ரீசார்ஜ் செய்ய 3.5 ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.
நாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி டேட்டாவும், நாள் ஒன்றிக்கு 4 ஜிபி வழங்கும் ரூ.509 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 5.5 ஜிபி டேட்டாவும் மற்றும் நாள் ஒன்றிக்கு 5 ஜிபி வழங்கும் ரூ.799 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 6.5 ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.
இதைத் தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மை ஜியோ ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்யும்போது ரூ. 149 திட்டத்தில் ரூ. 20 விலை குறைப்பு மற்றும் ரூ. 399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ரூ. 100 விலை குறைப்பு ஆகியவற்றை போன்பே வாயிலாக வழங்குகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை விபரம் ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டும் மை ஜியோ ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...