மேஷம்
இன்று தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த
காரியங்கள் முடியும்.
வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில்
பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு
முடிவுகளை எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ரிஷபம்
இன்று எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக
இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால்
நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
மிதுனம்
இன்று மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த
பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன்,
மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.
உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும்
வாய்ப்பு கூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கடகம்
இன்று புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப்
புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை
வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சிம்மம்
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும்.
புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை
உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில
பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன்
காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை
பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம்
கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
துலாம்
இன்று சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள்
உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம்
அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன
நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம்
உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
விருச்சிகம்
இன்று பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில்
அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள்
அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக
இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து
செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
தனுசு
இன்று சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு
பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி
வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை
கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை
கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
மகரம்
இன்று மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து
மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து
சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும்.
வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண
பிரச்சனை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
கும்பம்
இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே
விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள்
எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள்
வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
மீனம்
இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே
நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய
முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில்
வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...