Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 24.5.2016

மேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும்.
சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம் இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  

மிதுனம் இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

கடகம் இன்று சந்தாண பாக்கியம் கிட்டும். நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். கலைத்துறையினர் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  

சிம்மம் இன்று உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி இன்று வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  

துலாம் இன்று உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம் இன்று பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

தனுசு இன்று புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 

மகரம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம் இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

மீனம் இன்று தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive