Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 10.5.2018

மேஷம் இன்று மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

ரிஷபம் இன்று சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

மிதுனம் இன்று எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 

கடகம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  

சிம்மம் இன்று முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

கன்னி இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


துலாம் இன்று தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

விருச்சிகம் இன்று வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  

தனுசு இன்று வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்ய இயலும். பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 

மகரம் இன்று உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  

கும்பம் இன்று நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த வேலையானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 

மீனம் இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive