சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அதே இடத்தில்
அபராதம் வசூலிக்கும் SPOT FINE முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.அதற்குப் பதிலாக, அபராத தொகையானது ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவும், எஸ்.பி.ஐ.-ஆன்லைன் பேங்கிங், பே.டி.எம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றங்களில் அபராதத்தொகை செலுத்துவோருக்கு ஸ்வைபிங் மெஷின் மூலம் இ-செலான் வழங்கப்பட உள்ளது.
வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமாக பெறும் போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...