Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to stop ads from Google Chrome

அன்றாட பயன்பாட்டில் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இந்நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எந்தக் கட்டணமும் வசூலிக்காமல், இந்தத் தேடல் ஜாம்பவான் நிறுவனம் இந்த அளவிற்கு எப்படி வளர்ந்தது?


இதற்கான பதில் விளம்பரங்கள் தான். கடந்த 2016 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் ஏறக்குறைய 67 முதல் 68% வரை விளம்பரங்களில் இருந்து தான் பெற்றது. விளம்பர இணைப்புகளையும் சேர்த்தால், இந்த அளவு 90% வரை உயர்கிறது.

இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம், தங்களின் பிரவுஸரில் உள்கட்டமைப்பு கொண்ட ஒரு விளம்பர தடுப்பை இணைக்கும் தங்கள் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இந்த விளம்பர தடுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விளம்பர தடுப்பு வசதியின் மூலம் தளத்தில் உள்ள எல்லா விளம்பரங்களும் நீக்கப்படாமல், சிறந்த விளம்பரங்களின் தரத்தை எட்டாதவை மட்டுமே தடுக்கப்படும்.

பாப்-அப் விளம்பரங்கள், ஆட்டோ-ப்ளே வீடியோக்கள் மற்றும் முழு திரையில் வரும் விளம்பரங்கள் உள்ளிட்ட 12 வகையான விளம்பரங்கள், சிறந்த விளம்பர தரத்தைப் பெறாமல், இந்த வகையின் கீழ் வருகின்றன.

நீங்கள் பிரவுஸிங் செய்யும் போது, உங்களை தொந்தரவு செய்யும் இது போன்ற விளம்பரங்களைத் தடுக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைச் செய்து, அதை தடுக்கலாம்.

1) கூகுள் கிரோமின் முகப்பு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட மெனு மீது தட்டி, அமைப்புகளை அணுகவும்.

2) இதன்பிறகு, "தள அமைப்புகள்" என்பதை தேர்ந்தெடுத்து, "விளம்பரங்கள்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3) அங்கே உள்ள ஒரு மாற்று தேர்வை முடக்குவதன் மூலம், நீங்கள் காண விரும்பாத விளம்பரங்களைத் தடுத்து விடலாம்.

கூகுள் நிறுவனத்தின் மேற்கண்ட அறிவிப்பு வெளியான பிறகு, ஏறக்குறைய 42% தளங்களில் வரும் விளம்பரங்களில் மேம்பாட்டை காண முடிந்தது. இந்த விளம்பர தரத்தை எட்டாத தளங்களைத் தங்களின் விளம்பர அனுபவ அறிவிப்பு கருவி மூலம் தொடர்பு கொண்டு, அந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று கூகுள் நிறுவனம் விரும்புகிறது.

அந்தத் தரத்தை எட்டாத பட்சத்தில், குறிப்பிட்ட தளங்களின் விளம்பரங்களை 30 நாட்களுக்கு கூகுள் தடுத்துவிடும். இதற்கு பிறகும், தங்களின் விளம்பரங்கள் மீண்டும் வெளியாக வேண்டும் என்று இந்த தளங்கள் விரும்பினால், இது குறித்த ஒரு கையேடு மதிப்பாய்வை சமர்ப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive