சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்இ தலைவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு மா ர்ச் மாதம் 5ம் தேதி தொடங்கியது.
ஏப்ரல் 4ம் தேதி தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுடன் 12ம் தேர்வும் நடந்தது. இரண்டு தேர்விலும் நாடு முழுவதும் 28 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் போது கணக்கு பாடத்தின் கேள்வித்தாள் வெளியானதாக ஒரு புகார் எழுந்தது. அது குறித்து டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் அது வதந்தி என்று தெரியவந்தது.
இதையடுத்து திட்டமிட்ட தேதியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிஸ் ஸ்வரூப் நேற்று தெரிவித்தார். கடந்த ஆண்டு போல அல்லாமல் இணைய தளத்தில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...