Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நெட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

நெட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஜூன் 2 முதல் 24 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ நடத்திவரும் நெட் தேர்வு இந்தாண்டு ஜூலை 8ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதுவரை மூன்று தாள்கள் இருந்த நெட் தேர்வில், இந்தாண்டில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று (மே 21) முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை www.unom.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனச் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

இயக்குநர் (பொறுப்பு)

மாணவர் ஆலோசனை மையம்

சென்னை பல்கலைக்கழகம்

சேப்பாக்கம் வளாகம்

சென்னை - 600 005. தொலைப்பேசி எண் 044 - 2539 9518




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive