மழலையர்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மதிப்பிடும், வரைவு விதிமுறைகளை,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் தயாரித்துள்ளது.
'பிளே ஸ்கூல்' என அழைக்கப்படும் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படும், குழந்தைகளின் திறன்களை மதிப்பிடுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி., புதிய வரைவு விதிமுறைகளை தயாரித்துள்ளது; அதில் கூறியிருப்பதாவது:
மழலையர் பள்ளிகளில், குழந்தைகள் நடந்து கொள்ளும் விதம், மற்றவர்களுடன் பொருட்களை பகிர்தல், கவனித்தல், பென்சில்களை சரியாக பிடித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், மதிப்பிட வேண்டும். குழந்தைகள் எளிதாக பழகக் கூடியவர்களா அல்லது கடினமானவர்களா என்பதை கண்டறிய வேண்டும்.
உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தல், மற்றவர்களுடன் எவ்வாறு உரையாடுகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து, மதிப்பிடுவதுடன், அவர்களின் கற்றல் திறனை சோதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக மழலையர் பள்ளிகளில் மாணவர் மதிப்பீடு குறித்த, வரைவு விதிமுறைகளை, என்.சி.இ.ஆர்.டி., தயாரித் துள்ளது. இந்த வரைவு விதிமுறைகள், நிபுணர் குழுவினரின் பரிசீலனை மற்றும் திருத்தத்திற்குப் பின், முறைப்படி வெளியிடப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...