அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததால்,
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 6-ம் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம் என்பதால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததால், வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீட் இயக்குனர் சான்யா பரத்வாஜ் தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் விண்ணப்பங்களில் பரிந்துரைத்த 3 தேர்வு மையங்களில் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், கடந்தாண்டு சுமார் 82,000 மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும் இந்தாண்டு 1.10 லட்சம் மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தாண்டு விண்ணப்பம் அதிகமாக வந்திருக்கும் மாநிலங்களில் அடுத்தாண்டு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...