பணி பாதுகாப்புக் கோரி கடலூரில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று (மே 28) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தால் அவதியுற்ற பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் கர்ப்பிணிப் பெண் இறந்ததாக, அவரது உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திடீரென இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்புக் கோரி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனையில் பணி ஆட்கள் இல்லாததால், சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளாயினர்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இன்று பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்தத் தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தடுத்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...