டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள்,
துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில், அசாதாரண சூழல் நிலவுவதால், அங்கு நடக்கவிருந்த, டி.என்.பி.எஸ்.சி.,யின் துணை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அரசு பணியாளர்களுக்கான துணை தேர்வுகள், இன்று முதல், வரும், 31ம் தேதி வரை, நடத்தப்படுகிறது. 'இந்த தேர்வுகள், நிர்வாக காரணங்களால், துாத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் தள்ளி வைக்கப்படுகிறது. மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...