Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயில்நிலைய வைஃபை-யை பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த கூலித்தொழிலாளி.!

கடந்த ஐந்து ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள எர்ணாகுளம் இரயில்நிலையத்தில் பாரம் தூக்கி தனது அன்றாடபிழைப்பை நடத்திவருகிறார் ஶ்ரீநாத்.


  Sreenath has been earning his livelihood carrying heavy luggage at Ernakulam Junction in Kerala for the past five years.
சிவில் சர்வீஸ் எனும் குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராபவர்கள் எப்போதும் புத்தக மலைகளுக்கு இடையே இருப்பர், ஆனால் கேரள பணியாளர் தேர்வாணயத்தின் தேர்வில் வெற்றி பெற்ற ஶ்ரீநாத் என்ற கூலித்தொழிலாளி, பணிபுரிந்து கொண்டே போன் மற்றும் இயர்போனின் உதவியுடன் தேர்வுக்கு தயாராகியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள எர்ணாகுளம் இரயில்நிலையத்தில் பாரம் தூக்கி தனது அன்றாடபிழைப்பை நடத்திவருகிறார் ஶ்ரீநாத். சகப்பணியாளர்களை போலில்லாமல், பாரத்தை தனது தோள்களில் சுமந்து கொண்டே டிஜிட்டல் பாடங்களை கேட்டும் வருவார். இயர்போன் வாயிலாக தனது ஆசிரியர்களிடம் கலந்துரையாடவும் செய்வார்.
ஶ்ரீநாத்
மேல்நிலை கல்வியை முடித்தவரான ஶ்ரீநாத், எர்ணாக்குளம் இரயில்நிலையத்தில் உள்ள இலவச வைஃபை இணையச் சேவையை கற்பதற்காக பயன்படுத்திக்கொண்டார். "நான் மூன்று முறை இந்த தேர்வை எழுதியிருந்தாலும், இம்முறை தான் இரயில்நிலைய வைஃபையை பயன்படுத்தினேன். பாரங்களை தூக்கிக்கொண்டு இயர்போன்களின் மூலம் பாடங்களை கேட்டுக்கொண்டே மனதில் அவற்றிற்கு விடையளிப்பேன். இப்படித்தான் பணிபுரிந்து கொண்டே படித்தேன். பின்னர் இரவில் நேரம் கிடைக்கும் போது பாடங்களை திருப்புதல் செய்வேன்" என்கிறார் ஶ்ரீநாத்.
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த வைஃபை சேவையை துவக்கி வைத்தார். ரயில்டெல் கார்பொரேஷன் இந்தியா லிமிட்டேட் நிறுவனத்தின் சில்லறை இணைய விநியோக அமைப்பான ரயில்ஒயர் மூலம் பயணிகளுக்கு இலவச இணையசேவை வழங்கப்படுகிறது.
இலவச வைஃபை
மே2018 கணக்கு படி,நாட்டில் குறைந்தபட்சம் 685 இரயில் நிலையங்களில் இலவச வைஃபை தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ700 கோடி மதிப்பீட்டில் மார்ச்2019 க்கு முன்பு, மொத்தமுள்ள 8,500 இரயில் நிலையங்களிலும் வைஃபை வசதியளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய ரயில்வே.
எர்ணாகுளம்
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள மூணாறு பகுதியை சேரந்தவர் ஶ்ரீநாத். முதிரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி என்ற மூன்று நதிகள் இணையும் பகுதி என்பதை குறிக்கும் வகையில் மூணாறு என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள முக்கிய இரயில் நிலையம் எர்ணாகுளம் ஆகும்.
நில வருவாய் துறை
கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத வகையில்,பயிற்சி பெறுவதற்கான கேள்வித்தாள்கள் பதிவிறக்கும் செய்வது, ஆன்லைன் தேர்வுகளை எழுதுவது போன்றவற்றை ரயில்நிலைய வைஃபை மூலம் 20-40 mbps வேகத்தில் செய்ததாகவும், இதன் மூலம் புத்தகம் வாங்கும் பணத்தை சேமித்ததாகவும் கூறுகிறார் ஶ்ரீநாத். கேரள பணியாளர் தேர்வாணயத்தின் நேர்முகத்தேர்விலும் தேர்ச்சியடையும் பட்சத்தில், நில வருவாய் துறையில் கிராம கள உதவியாளராக விரும்புகிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive