தொடக்க கல்வி ஆசிரியர், பட்டய வகுப்புகளை குறைத்ததற்கு எதிர்ப்பு
தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில் இயங்கி வந்த, தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய
வகுப்புகளை, ௧௦ மாவட்டங்களுக்கு என குறைத்து, ௯ம் தேதி, பள்ளி கல்வித் துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில், மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்கள் சங்கம்
சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில், அரசின்
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டு வந்த, தொடக்க கல்வி
ஆசிரியர் பட்டய வகுப்புகள் மூடப்பட்டு, ௧௦ மாவட்டங்களில் மட்டுமே
நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதனால், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், மாணவர்கள் சேரும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். ஏழை எளிய மாணவர்களால், கணிசமான தொகையை செலுத்தி,
தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மேலும், வேறு மாவட்டங்களுக்கும் சென்றும்
படிக்க முடியாது. தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும்
விதமாக, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்த அரசு உத்தரவு உள்ளது.
இதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி
பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்
ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கல்வித்துறைக்கு
உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், ௫ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...