நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும்
அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க
உள்ளது
*நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது
*இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள்தேவைக்கு ஏற்ப கேட்கும்
போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்
கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
*ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக்
ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக
இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*இந்த புதிய
திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர்
தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு
வகைசெயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்துவழங்கப்பட உள்ளது.
குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது
*இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்
கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு
முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுடன் ஆலோசனை நடத்துவது
வழக்கம்
*ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த
நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டஇந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர
வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார்
*புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவுதொகை ஒதுக்கப்படும் என்ற
விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது
*உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப்
பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில
அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள்
தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...