டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச
சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி அளித்த
சேவைகளுக்கான சேவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு
ஒன்றை வங்கிகளுக்கு அனுபி இருந்தது. வங்கிகள் அளிக்கும் பல சேவைகளுக்கு
சேவைக் கட்டணம் வசூலிக்காததால் இலவச சேவைகள் வரி விதிப்பிற்கு
அப்பாற்பட்டவை என வங்கிகள் கருதி வந்தன. இதனால் வங்கிகள் அதிர்ச்சி
அடைந்தன.
அதை ஒட்டி வங்கிகள் தங்களுக்கு இதனால் இழப்பு நேரிடும் என அரசுக்கு
தெரிவித்தன. மேலும் இலவச சேவைகளுக்கு வரி வசூலிப்பதை வங்கி
வாடிக்கையாளர்களும் எதிர்த்தனர். இந்த வரி விதிப்பு குறைந்தபட்ச தொகையை
கணக்கில் வைக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கும் அளிக்க வேண்டும்
என அரசு தெரிவித்திருந்தது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "வங்கிகள்
மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
ஆலோசனை முடிவில் வங்கிகள் அளிக்கும் இலவச சேவைகளுக்கான வரி விதிப்பை
திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் அறிவிப்பு
விரைவில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...