சென்னை, சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-
* அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா?
* 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா?
* மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?
* குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்?
சட்ட திருத்தம்
* துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா?
* பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது?
இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...