கல்வித்துறை வெளியிடும் முன்பே 1,6,9
மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் குறுந்தகடுகளாக
('சிடி') விற்பனைக்கு வந்து விட்டன.பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல்
பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ''சி.பி.எஸ்.இ.,-
என்.சி.இ.ஆர்.டி.,க்கு இணையாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதில்
எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத் திட்டம் இருக்கும்,'' என கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 பாடத் திட்டம் ஏப்.,4ல் முதல்வர் பழனிசாமியால் வெளியிடப்பட உள்ளது. ஆனால் மதுரை, சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய பாடத் திட்டம் குறுந்தகடு மற்றும் 'பென் டிரைவ்' மூலம் விற்கப்படுகிறது. இதன் விலை 10 ஆயிரம் ரூபாய்.புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், 'வெளியீட்டாளர்கள் சிலர், கல்வி அதிகாரிகளிடம் நெருக்கமாக உள்ளனர். அதை பயன்படுத்தி முதல்வர் வெளியிடும் முன்பே குறுந்தகட்டில் பெற்று அதற்கான கையேடுகள் தயாரிக்கும் நிலையில் உள்ளனர். கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்றனர்.
உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முன்கூட்டியே பாடத் திட்டம் வெளியாக வாய்ப்பில்லை. தவறான தகவல்' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...