மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,)
நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"
என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஆர்.டி.இ.,யின் கீழ்
நுழைவு வகுப்புக்காக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்ய,
இன்று (மே 18) கடைசி நாள். கல்வித்துறை, தொண்டு நிறுவனங்கள் சார்பில்
ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதுவரை 8,500
க்கும் மேல் விண்ணப்பம் பதிவு செய்து மதுரை முன்னிலையில் உள்ளது. 6950
விண்ணப்பங்களுடன் சென்னை 2ம் இடத்திலும், 6784 விண்ணப்பங்களுடன் வேலுார்
3ம் இடத்திலும் உள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து
723 பேர் பதிவு செய்துள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு, அனைத்து
மாவட்டங்களிலும் மே 28ல் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்படும். இந்நிகழ்வு பெற்றோர் முன்னிலையில் வெளிப்படையாக நடக்கும்.
இதில் தவறு நடப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...