மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எழுத்துக்களை புரியவைக்க அவற்றை முப்பரிமாண வடிவில் கற்பிக்கலாம் என்றெண்ணி திருச்சியில் உள்ள ஒரு கடையில் கேட்டேன். வெறும் க, ங, ச மட்டும் உள்ளதையே ரூ.700/- என்று கூறினர். ஆனால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்தினால் சில மாதங்கள் கூட வராது. இதற்கு நாமே தயார் செய்துகொள்ளலாம் என்றெண்ணி, மரப்பலகையில்
செய்யலாமா என்று தச்சரிடம் கேட்டேன். அவர், அது சரிவராது என்று கூறி பிளைவுட்டில் செய்ய ஆலோசனை கூறினார். பிளைவுட் கடையில் சென்று கேட்டேன். அவரும் அது சரிவராது என்று கூறி "SWITCH BOARD"ல் எழுத்துக்களை வரைந்து அதை switch board cut செய்பவர்களிடம்
கொடுத்து கட் செய்துகொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார். பின்பு அவ்வாறு Switch board வாங்கி அதில் எழுத்துக்களை வரைந்து அதை கட் செய்பவரை நாடிச் சென்றேன். ஒரு கடைக்காரர் முடியாது என்று கூறியபிறகு வேறொருவரை தேடிச் சென்றேன். நமக்காகவே காத்திருப்பதுபோல் ஒருவர் இருந்தார்.
அவரிடம் கொடுத்து எழுத்துக்களின்
வடிவத்தைப் பெற்று எங்கள் பள்ளியில் பயன்படுத்தி வருகிறேன். ( நான்காம் வகுப்பு ஆங்கிலப் பாடமான 'LITTLE TUPPEN கதைபோல் ஆகிவிட்டது ! ). தற்போது இக்கடைக்காரர் ( பெயர் - தங்கப்பரிமணம். பெயருக்கேற்றாற்போல் மிகவும் தங்கமானவர். ) மாணவர்களுக்காக தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறார். இதுவரை 50 பள்ளிகளுக்கும் மேல் இவ்வெழுத்துக்களைப் பெற்று
பயன்படுத்திவருகிறார்கள். கட் செய்வதற்கும் , Switch boardக்கும் ஆகும் தொகை அதிகம் என்றாலும் பல வருடங்கள் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
ஆசிரியர் குருமூர்த்தி
9791440155
Good
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDelete