பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுஅரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி
ஆசிரியர்கள் டிபிஐ வளாத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் கடந்த 2012ம் ஆண்டு உயர்நிலை மேனிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், 16 ஆயிரம் பேர் பணி நியமனம் பெற்றனர்.அவர்களுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்ேபாது, 6 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். அப்போது, ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உறுதியளித்ததால், அவர்கள் சாலையில் இருந்து டிபிஐ வளாகத்துக்குள் சென்றனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து டிபிஐ வளாகத்தில் அமர்ந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...