ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG-
உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய
அறிவிப்புகள்
*மொழி பாடங்கள் தாள் 1, தாள்2 என்ற முறையை மாற்றி ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் ரகுல் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்
*அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை துவக்க நடவடிக்கை.
*அரசு பள்ளி ஆசிரியருக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு
*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.
*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.
*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.
*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்
இன்றைய சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
அய்யா வணக்கம்:
ReplyDeleteஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது.
முடிந்த வரை தவிர்க்கவும்
தலைவா! இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் வைத்தீர்கள் என்றால் , அந்த தொகுதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் at least மழைக்காகவோ அல்லது வெயிலுக்காகவாவது ஒதுங்கினாரா என தெரிய வந்து விடும்.
ReplyDeleteதலைவா! இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் வைத்தீர்கள் என்றால் , அந்த தொகுதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் at least மழைக்காகவோ அல்லது வெயிலுக்காகவாவது ஒதுங்கினாரா என தெரிய வந்து விடும்.
ReplyDelete