பச்சை மிளகாயின் உடல் நலத்தைப் பற்றி பேசுகையில் நாம் அனைத்து வகையான அயல்நாட்டு மிளகாய்களைப் பற்றியும் கற்பனை செய்வோம்.
குடைமிளகாய் என்பது வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு என்பது அனைவரும் நன்கு அறிந்து செய்தி தான்.
இருப்பினும் நாம் உணவோடு சேர்த்து உண்ணுகின்ற சாதாரண பச்சை மிளகாயை சாதரணமாக விட்டு விட முடியாது. பச்சை மிளகாயில் உள்ள உடல் நல பயன்கள் உங்களை அதிசயிக்க வைக்கும்.
சராசரியான இந்தியர்கள் பச்சை மிளகாய் உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பச்சை மிளகாயின் உடல் நல பயன்கள், நாம் நம் உணவோடு உண்ணும் பொதுவான மிளகாய்களிலேயே உள்ளது.
பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவிற்கு மிளகாய் போடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை உண்ணுவதே நல்லதாகும்.
புற்றுநோயை எதிர்த்து போராடும்
பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது. இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை காக்கிறது பச்சை மிளகாய்.
மேலும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காக்கும். இதுப்போக, வயதாகும் செயல்முறையும் குறையும்.
உங்கள் சருமத்திற்கு சிறந்தது
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ-யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
உணவு செரிமானம் வேகமாக நடக்கும்
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
வளமையான இரும்புச்சத்து
இந்திய பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்திய மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...