Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உபரி பணியிட அதிகரிப்பு - கலந்தாய்வு நடக்குமா? - கலக்கத்தில் ஆசிரியர்கள்

உபரி ஆசிரியர் பணியிடம் அதிகரிப்பால் நடப்பாண்டில் கலந்தாய்வு நடக்குமா'' என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் படி
ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.இவர்களை பணி நிரவல் செய்வதற்கான காலியிடம் விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளன.இதனால், மே மாத கலந்தாய்வு நடக்குமா என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது:'எமிஸ்' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால், உபரி ஆசிரியர் எண்ணிக்கை வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது.நடப்பாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கானல் நீராகத்தான் இருக்க வாய்ப்புள்ளது.
உபரி பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது.பதவி உயர்வை அளித்துஅதனால் ஏற்படும் காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தாலும் உபரி பணியிடங்கள் முழுவதையும் நிரப்ப முடியாத நிலையே ஏற்படும், என்றார்.




1 Comments:

  1. Appadiye nadanthallum vacancy kammi agathan irukkum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive