தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பங்கள் பெறலாம்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்டக் கல்லுாரிகளிலும், திண்டிவனத்தில் உள்ள, சரஸ்வதி சட்டக் கல்லுாரியிலும், இளநிலை சட்டப்படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' சட்டப்படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.விண்ணப்பங்களை பெறுவோர், ஜூன், 18க்குள் பூர்த்தி செய்து, பல்கலைக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு முதல், 'ஆன்லைனிலும்' விண்ணப்பங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.
http://tndalu.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து, 'நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட்' அட்டைகளை பயன்படுத்தி, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என, சட்ட பல்கலை துணை வேந்தர், தம்ம சூரியநாராயண சாஸ்திரி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...