டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:படித்த இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு பெறும்வகையில் அவர்களை டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி தேர்வு, ரயில்வே தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்த சென்னையில் கட்டணமில்லா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் ஜுன் மாதம் முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான வகுப்புகள் தினமும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடை பெறும்.இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் மே 14 முதல் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.civil servicecoaching.com என்ற இணையதளத்தில்அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...